உன் மனதை வென்று விடு (Master Your Mind)



இது வெறும் தன்னம்பிக்கை புத்தகம் அல்ல. நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக சொல்லி, அதை நமக்கு சாதகமாக மாற்றும் வழியை சொல்லும் புத்தகம்.

நாம் எல்லோரும் நினைக்கிறோம் வேகமாக ஓடினால் தான் ஜெயிக்கலாம் என்று. ஆனால் இந்த புத்தகம் சொல்வதோ வேறு:

மெதுவாக நடந்தால் தான், சீக்கிரம் இலக்கை அடைய முடியும்.

மனசு களைப்பாக இருக்கும்போது மேலும் மேலும் வேலை கொடுத்தால், மூளை முடங்கித்தான் போகுமே தவிர சுறுசுறுப்போடு இயங்காது. 

அதை சுத்தம் செய்து தான், மீண்டும் ஓட வைக்க வேண்டும்.

இந்த புத்தகத்தின் கூறப்பட்டுள்ள  3 முக்கிய கருத்துக்களை காண்போம்

1⃣ உன் உள்ளீட்டை கட்டுப்படுத்து:

நம் மூளை ஒரு கணினி மாதிரி. நீ என்ன கொடுக்கிறாயோ அதையே திருப்பித் தரும். 

நாள் முழுக்க கெட்ட செய்திகள், வம்பு பேச்சுக்கள், தேவையில்லாத ரீல்ஸ் பார்த்தால் நம் மனதில் குப்பை தான் சேரும். 

நல்ல புத்தகங்கள், நல்ல மனிதர்கள், நல்ல எண்ணங்களை மட்டும் நம் மூளைக்கு உணவாக கொடுக்க வேண்டும்.

2⃣ தலைக்குள் இருக்கும் குரல்களை வெல்:

நம் மனதிற்குள் இரண்டு குரல் பேசும். ஒன்று "உன்னால் முடியும்" என்றும். இன்னொன்று "உன்னால் முடியாது, நீ தோற்று விடுவாய்" என்றும் பேசும்.

 இரண்டாவது குரல் தான் நம்மை கீழே இழுக்கும். அந்த கெட்ட குரலை எப்படி கண்டுபிடிப்பது, எப்படி அடக்குவது என்று இந்த புத்தகம் கற்றுத் தரும்.

3⃣ தொடர்ந்து எரியும் நெருப்பாக இரு:

சிலர் தீபாவளி வெடி மாதிரி - ஒரு நிமிடம் ஜொலிப்பார்கள், பிறகு அணைந்து விடுவார்கள்.

 ஜெயித்தவர்கள் அகல் விளக்கு மாதிரி - மெதுவாக, தொடர்ந்து எரிவார்கள்.

 தினமும் கொஞ்சம் நேரம் அமைதி, ஆழ்ந்த மூச்சு, யோசித்தல் இதுதான் நம்மை மீண்டும் சக்தியோடு இயங்க வைக்கும்.

🔴யார் இதை படிக்கலாம்?


மனக்குழப்பம் உள்ளவர்கள், ஒரு வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்கள், பயம், பதட்டம் அதிகம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்கலாம்.


-- - - - - - - - -- - - - - - - - -- - - - - - - - - - - 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

📖 வேங்கையின் மைந்தன் - அகிலன்