இடுகைகள்

ஆகஸ்ட், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உன் மனதை வென்று விடு (Master Your Mind)

படம்
இது வெறும் தன்னம்பிக்கை புத்தகம் அல்ல. நம் மூளை எப்படி வேலை செய்கிறது என்பதை அறிவியல் பூர்வமாக சொல்லி, அதை நமக்கு சாதகமாக மாற்றும் வழியை சொல்லும் புத்தகம். நாம் எல்லோரும் நினைக்கிறோம் வேகமாக ஓடினால் தான் ஜெயிக்கலாம் என்று. ஆனால் இந்த புத்தகம் சொல்வதோ வேறு: மெதுவாக நடந்தால் தான், சீக்கிரம் இலக்கை அடைய முடியும். மனசு களைப்பாக இருக்கும்போது மேலும் மேலும் வேலை கொடுத்தால், மூளை முடங்கித்தான் போகுமே தவிர சுறுசுறுப்போடு இயங்காது.  அதை சுத்தம் செய்து தான், மீண்டும் ஓட வைக்க வேண்டும். இந்த புத்தகத்தின் கூறப்பட்டுள்ள  3 முக்கிய கருத்துக்களை காண்போம் 1⃣ உன் உள்ளீட்டை கட்டுப்படுத்து: நம் மூளை ஒரு கணினி மாதிரி. நீ என்ன கொடுக்கிறாயோ அதையே திருப்பித் தரும்.  நாள் முழுக்க கெட்ட செய்திகள், வம்பு பேச்சுக்கள், தேவையில்லாத ரீல்ஸ் பார்த்தால் நம் மனதில் குப்பை தான் சேரும்.  நல்ல புத்தகங்கள், நல்ல மனிதர்கள், நல்ல எண்ணங்களை மட்டும் நம் மூளைக்கு உணவாக கொடுக்க வேண்டும். 2⃣ தலைக்குள் இருக்கும் குரல்களை வெல்: நம் மனதிற்குள் இரண்டு குரல் பேசும். ஒன்று "உன்னால் முடியும்" என்றும். இன்னொன்று "உன்னா...