இடுகைகள்

செப்டம்பர், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

The Radium Girls

படம்
The Radom Girls - ஒளிர்ந்த ரேடியத்தின் பின்னால் மறைந்திருந்த இருள் சில புத்தகங்களை நாம் வாசித்து முடிக்கும் போது அந்த புத்தகம் பல உணர்வுகளை நம்மை அறியாமல் நம்மிடம் கடத்தி இருக்கும். Kate Moore எழுதிய The Radium Girls அப்படிப்பட்ட ஒரு புத்தகம். நாம் வாழும் உலகம் எவ்வாறு உருவானது, சில உரிமைகள் எத்தனை வலிகளுக்குப் பிறகு கிடைத்தன, ஒரு சாதாரண மனிதனின் குரல் எவ்வாறு வரலாற்றையே மாற்றக்கூடும் என்பதை அவை நமக்குள் கேள்விகளாக விதைத்துச் செல்கின்றன. இது வெறும் ரேடியத்தைப் பற்றிய புத்தகம் அல்ல. இது அறிவியலின் வரலாறு மட்டுமல்ல. இது தொழிற்சாலைகளின் வரலாறும் அல்ல. தங்கள் உழைப்பால் உலகை ஒளிரச் செய்த பெண்கள், அதே ஒளியால் தங்கள் வாழ்க்கையை இழக்க நேர்ந்த ஒரு துயரமான வரலாறு. 1920களின் அமெரிக்காவில் ரேடியம் அப்போது ஒரு அதிசயப் பொருளாகக் கருதப்பட்டது. அதன் ஒளிரும் தன்மை மக்களை வியப்பில் ஆழ்த்தியது.  கடிகாரங்களின் எண்களும் ஊசிகளும் இருளிலும் ஒளிர வேண்டும் என்பதற்காக ரேடியம் கலந்த பெயிண்ட் பயன்படுத்தப்பட்டது. அந்தப் பெயிண்டை மிக நுணுக்கமாகப் பூசுவதற்காக தொழிற்சாலைகளில் ஏராளமான இளம் பெண்கள் வேலைக்கு அமர...